Friday, December 8, 2006

[anbudan] Re: Pazaiya kaL

என் அறைக்குள்
நுழையும்போது மட்டும்
உன்
கொலுசு சப்தங்களையும்
வளையல் ஓசைகளையும்
கழற்றி வைத்துவிட்டு வா!


இல்லையென்றால்
என் பேனாவின்
உறக்கம்
களைந்துவிடும்!

------------------------------
செதுக்கத் தேவையின்றியே
அருமையாக இருப்பதால், அதிக
மாற்றங்கள் இல்லாமல் :

என் அறைக்குள்
நுழையும் பொழுது மட்டும்
உன்
கொலுசையும்
வளையல்களையும்
உறங்கச் செய்து வா

இல்லையெனில்
உறக்கம்
களைந்துவிடும்
என் பேனா

ப்ரியன்,
இன்றைக்குத் தான் இந்த
இழையின் கவிதைகள்
அத்தனையும் படித்தேன்.
சுட்டிக்கு நன்றி. மிக
அற்புதமாக இருக்கின்றன
ஒவ்வொன்றும். முக்கியமாக,
"அவளின் எதிர்பார்ப்புகள்"
ரொம்ப அழகு - தாமரையின்
வசீகரா, பார்த்த முதல் நாள்
போல..

--~--~---------~--~----~------------~-------~--~----~
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home