Saturday, December 9, 2006

[anbudan] Re: Kaathal Raja Kadithangal

வாழ்க்கை, ஜாக்கிரதை..

வாலிபம் என்பது
வாழ்க்கையின் நிதரிசனமறியா
வசந்த காலம்.
வாடுமுன் புரிந்துகொள்ள வேண்டும்.

வறுமையை அறிந்தால்
வாழ்க்கையின் அருமையும் புரியும்.

காட்டையும், மேட்டையும்,
கல்லையும், முள்ளையும்
கண்ணில் காணுமுன் உங்கள்
கவிதைகளிலிருந்து
கலைந்து வாருங்கள்.

சாதனைகள் படைப்பதற்கு
வேதனைகளை உணரவேண்டும்.

படைப்புகள்
பக்குவப்பட்ட மனதிலிருந்து
பிறக்கின்றன.

வாழ்க்கை தன்னை
உங்களுக்கு உணர்த்துமுன்
நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

பூ வாடலாம் - உங்கள்
புன்னகை வாடிவிடக் கூடாது.

சாதிப்போம் என்ற நம்பிக்கையுடனும்
சாதனையில் சந்தேகமின்மையுடனும்
புறப்படுங்கள்!

நிதரிசனங்களை
நிச்சலனங்களுடன் எதிர்கொள்ளுங்கள்!

பயப்படாதீர்கள்!
பயப்பட வைக்கும் எதனையும்
பாடமாக்கிக் கொள்ளுங்கள்!

எச்சரிக்கையுடன் இருங்கள்!
ஏற்றம் பெறுங்கள்.

 
On 12/7/06, sundar . <thi.sundar@gmail.com> wrote:
 
 
நிறைய உப்பிருப்பதாலோ
கடலே
உனக்கு இந்த கொதிப்பு? (BP)

 
On 12/7/06, Kaathal Raja < kaathalraja@gmail.com> wrote:

கடற்கரைக் காட்சி

மனிதர் முகம் காண மறுத்து தன்
முதுகு காட்டிக் கடலை
முத்தமிட முயற்சிக்கும் மனிதர்கள்..

நிஜத்தில்தான் நிறுத்த முடியவில்லை;
நிழற்படத்திலாவது..
புகைப்படக் கலைஞர்கள்
புன்னகைக்கும் அலைகள் முன்.

நேரம் போனது தெரியாமல் கடலை
நேசப் பார்வை பார்த்தவர்கள்
நேரம் உணரும்போது
நிதரிசனம் உறைக்கும்பொழுது

தவிப்புடன் எழுந்து தூசி தட்டுகிறார்கள்;
கவலை ஒடிக் கொள்கிறது.



On 12/7/06, Kaathal Raja < kaathalraja@gmail.com > wrote:
ஆஹா.. என்னப்பா நடக்குது இங்க?


On 12/6/06, sundar . < thi.sundar@gmail.com > wrote:

இந்த மாதிரியெல்லாம் கவிதை பாடினால் பழம் மேலே ஆசையே போயிடுது.

அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா, இந்த கவிதையே திருப்தியா பழம் சாப்பிட்ட மாதிரி ஆயிடுச்சுன்னு! 



On 12/6/06, ஆனந்த் குமார் < n.anandhakumar@gmail.com > wrote:

அட!! சுந்தரரே!!! என்னை எந்த பழம் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. பப்பாளி மட்டும் வேண்டாம்!!

பப்பாளி பழம்
அழகு நிலையங்களில் வலம்!!
அறியாத சிறுவனா நீ!

வரத்தினைக் கேளு
வாழ்க்கையில் தூளு!!
5$ எல்லாம் வீண்!
மற்றவையெல்லாம் தேன்!!

ஏற்றுக்கொள்வாய்
உண்டு பசிதீர்ப்பாய்..!!

அன்புடன்,
நா.ஆனந்த குமார்



On 12/6/06, Kanthi Jaganathan < kanthi.jaganathan@gmail.com > wrote:
சுந்தர்,
 
நீங்களும் ஆனந்த் ரேஞ்சுக்கு எழுதறீங்க!   போட்டு தாக்குங்க! :-)
 
அன்புடன்
~காந்தி~


--
காதலுடன்
ராஜா



--
காதலுடன்
ராஜா



--~--~---------~--~----~------------~-------~--~----~
     அன்புடன் - உலகின் முதல்
       யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home