Sunday, December 10, 2006

[anbudan] haikuu ,,,,

மக்னே  அன்று நீ என் வயிற்றினுள் உதைத்த உதை இன்ப உதை  ,
இன்று என் இதயத்தில் உதைத்தவுடன்  துன்ப உதை ஆனது ஏன் ?
 
 
பக்க வாத்தியங்களுடன் பாட்டு இசைக்கிறாய் 
என் இதய வீணை வாசிப்பது கேட்கவில்லையா?
 
ஏ கொசுவே  வந்து இரத்ததை உறிஞ்சினாய் .
ஆனால்  அடிபடாமல்  பறந்து விட்டாயே ,
 
 
அப்பா எப்போதும்     நீ அப்பாவாகவே இருக்கிறாயே
என்று நீ என் நண்பனாவாய்?
 
நிலைக்கண்ணாடியில்  நீ உன் அழகை ரசிக்கிறாய் ,
என் மனக் கண்ணாடியில்  ஏன்  பார்ப்பதில்லை ?
 
 
கிளியாகக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி  நீ பறந்து விட்டாய் 
என்னைக் கூண்டில் அடைத்து விட்டு  ,,,,,
 
அன்புடன் விசாலம்  

--~--~---------~--~----~------------~-------~--~----~
     அன்புடன் - உலகின் முதல்
       யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home